வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் - 2022

முடியரச முழக்கம்

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

வீறுகவியரசர் முடியரசனார்

 ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர். 

நடுவர் குழு:

செந்தலை ந.கவுதமன் நிறுவனர்,

பாவேந்தர் பேரவை, சூலூர், கோவை,

தமிழ்நாட்டரசின் பாவேந்தர் விருதாளர்.

 

கவிஞர் தமிழ் இயலன்

தமிழ் நாட்டரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்,

இயக்குநர், “நான் ஓர் ஐஏஎஸ்” -அகாடமி

 

முனைவர் விஜய் அசோகன்

ஆராய்ச்சியாளர் (பொருள்களின் அறிவியல்),

கார்ல்சுருக பல்கலைக் கழகம், செருமனி,

மேலான் இயக்குநர், முல்லை பன்னாட்டுக் கல்வியியல் நிறுவனம்,

நிறுவனர், பன்னாட்டுத் தமிழர் பேரவை.

 

காரை செல்வராஜ்

காரை செல்வராஜ் மாநில இலக்கிய அணிச் செயலாளர், தொலைக்காட்சி விவாத கருத்துரையாளர், சமூக செயற்பாட்டாளர்.

வெற்றியாளர்கள்

அக்டோபர் 2022 இல் வெளியான அறிவிப்பு:

பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் / கருப்பொருள்:

  • வீறுகவியரசரின் கவிப்புரட்சி
  • வீறுகவியரசர் படைப்புகளில் தமிழியப்புரட்சி
  • வீறுகவியரசரின் புலமைத்திறம்
  • வீறுகவியரசரின் படைப்பாளுமை

போட்டிக்காக வீறுகவியரசரின் படைப்புகளைப் படிக்க விரும்புவோர் பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ள வீறுகவியரசர் கவிதைகளை எமது வலைத்தளத்தின் ‘நூலகம்’ எனும் தலைப்பிலான பகுதியில் தரவிறக்கிக்கொள்ளலாம்.

நூல்களை அலைபேசியில் தரவிறக்க இயலாமல் போனால் கணினியில் இருந்து முயலுங்கள். அப்படியும் இயலாமல் போனால் இந்த மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்பி வையுங்கள்.

 

பரிசுத்தொகை

மொத்தப் பரிசுத்தொகையான இந்திய ரூ.15,000/=  பின்வரும் முறையில் வெற்றியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள மின்சான்றிதழ் வழங்கப்படும்:

  • முதற்பரிசு: 5000/=
  • இரண்டாம் பரிசு: 3000/=
  • மூன்றாம் பரிசு: 2000/=
  • மேலும் ஐவருக்கு 5 x 1000/= சிறப்புப் பரிசுகள்

விதிமுறைகள்:

  • உலகின் எப்பகுதியில் இருந்தும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்; வயது வரம்பு இல்லை.
  • போட்டியில் பங்கு பெற விரும்புவோர் முதலாவதாகக் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல் வேண்டும்.  இதன்போது எமது புலன எண் (WhatsApp no.) உங்களிடம் வழங்கப்படும்.
  • தரப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதாவதொன்றைத் தெரிவு செய்து மூன்று மணித்துளிகளுக்கு (3 நிமிடங்களுக்கு) மிகாதவாறு போட்டியாளர் தனது உரையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
  •  போட்டியாளர் தனது உரையை அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து (video recording), தரப்படும் புலன (WhatsApp) எண்ணுக்கு நவம்பர் 30, 2022 இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • கருப்பொருளை ஒட்டி அமையாத காணொளிகளும்  மூன்று மணித்துளிகளுக்கு அதிகமாக நீளும் காணொளிகளும் ஏற்கப்பட மாட்டா.
போட்டிக்கான காணொளியை உங்கள் அலைபேசியில் பதிவு செய்து அனுப்பலாம்

முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் வீறுகவியரசர் நினைவு நாளான டிசம்பர் 03, 2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும். போட்டி முடிவு அறிவிக்கப்படும் வரை போட்டியாளர் தனது உரை அடங்கிய காணொளியை வேறெங்கும் வெளியிடல் ஆகாது.

ஜனவரி 14, 2022 அன்று நடுவர் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும். போட்டியாளரின் பேச்சுத்திறன், ஆளுமை, மொழியறிவு, சொற்செறிவு, ஒலிப்பு முறை (பலுக்கல்), வலையொளிப் பக்கத்தில் குறித்த காணொளிகள் பெற்றிருக்கும் வரவேற்பு (பார்வை எண்ணிக்கை, விருப்பக் குறியீட்டு எண்ணிக்கை, பார்வையாளர் கருத்து) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடுவர் குழு வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.

தமிழர் திருநாளான ஜனவரி 15, 2023 (தைத்திரு நாள்) அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

tiktok, hand, touch-589488.jpg
முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும்