வீறுகவியரசர் முடியரசனார் – வாழ்க்கைக் குறிப்பு

இயற் பெயர் :      துரைராசு

புனை பெயர்:      முடியரசன் 

பெற்றோர்:      சுப்புராயன் – சீதாலெட்சுமி

பிறந்த ஊர்:      பெரியகுளம்

வாழ்ந்த ஊர்:      காரைக்குடி

தோற்றம்:      7.10.1920

மறைவு:      3.12.1998

தொடக்கக் கல்வி:      திண்ணைப் பள்ளி, பெரியகுளம் (1925), வேந்தன்பட்டி (1932)                            

மேற்கல்வி:      சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி (1933-34)

                              பிரவேசபண்டிதம்,சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி (1934-39)

                              வித்துவான், கணேசர் செந்தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43).

பணி :                தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை,உயர்நிலைப்பள்ளி, சென்னை (1947-49),

                              மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949-78),

                             மதுரைப் பல்கலைக்கழகம் தமிழியற் புலத்தில் நாடகக் காப்பியப் பணி (1985)

திருமணம்:      2.2.1949 (கொள்கை வழிச் சாதி மறுப்புத் திருமணம்)

துணைவியார்:      கலைச்செல்வி (சரசுவதி என்ற பெயரின் தமிழாக்கம்)

                              தோற்றம்: 20.09.1932, மறைவு: 25.04.2007

மக்கள்:      குமுதம், பாரி, அன்னம், குமணன், செல்வம், அல்லி

.இயற்றிய நூல்கள்

  1. முடியரசன் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு)      1954
  2. காவியப் பாவை      1955
  3. கவியரங்கில் முடியரசன்              “            1960
  4. பாடுங்குயில் “            1983
  5. நெஞ்சு பொறுக்கவில்லையே “            1985
  6. மனிதனைத் தேடுகிறேன் “            1986
  7. தமிழ் முழக்கம் “            1999
  8. நெஞ்சிற் பூத்தவை “            1999
  9. ஞாயிறும் திங்களும் “            1999
  10. வள்ளுவர் கோட்டம் “ 1999
  11. புதியதொரு விதி செய்வோம் “ 1999
  12. தாய்மொழி காப்போம் “ 2001
  13. மனிதரைக் கண்டு கொண்டேன் “            2005
  14. பூங்கொடி    (காப்பியம்)        1964
  15. வீரகாவியம் “ 1970
  16. ஊன்றுகோல் “ 1983
  17. இளம்பெருவழுதி (நாடகக் காப்பியம்) 2008
  18. எக்கோவின் காதல் (சிறுகதைத் தொகுப்பு 1999
  19. அன்புள்ள பாண்டியனுக்கு (கடித இலக்கியம்) 1999
  20. இளவரசனுக்கு “ 1999
  21. முடியரசன் தமிழ் இலக்கணம் (இலக்கணம்) 1967
  22. எப்படி வளரும் தமிழ்? (கட்டுரைத்தொகுதி) 2001
  23. பாடுங்குயில்கள் “ 1975
  24. சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் “” 1990
  25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு) 2008
  26. முடியரசன் தமிழ் உரை நூல் (பாடநூல்) 1961
  27. தமிழ்ச் சோலை “ 1966

                              புகழ் மகுடம்

தேடிவந்த விருதுகள், பட்டங்கள், பரிசுகள், — வழங்கியோர், இடம் – ஆண்டு

  • ‘அழகின் சிரிப்பு’ கவிதைக்கு முதல் பரிசு – பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை – 1950.
  • ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ பட்டம் – பேரறிஞர் அண்ணா – 1957.
  • ‘கவியரசு’ பட்டம், ‘பொற்பதக்கம்’ – குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்புமலை – 1966.
  • ‘முடியரசன் கவிதைகள்’ நூலுக்குப் பரிசு – தமிழ்நாடு அரசு – 1966.
  • ‘வீரகாவியம்’ காவிய நூலுக்குப் பரிசு – தமிழ்நாடு அரசு – 1973
  • ‘நல்லாசிரியர் விருது’பதக்கம் – கே.கே.சா.ஆளுநர்,தமிழ்நாடு அரசு -1974.
  • ‘சங்கப் புலவர்’ பட்டம் – குன்றக்குடி அடிகளார் – 1974.
  • ‘பாவரசர்’ பட்டம், ‘பொற்பேழை’ – மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர் – 1979.
  • ‘பொற்கிழி’ – பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி – 1979.
  • ‘பொற்குவை’ரூ10,000, மணிவிழா எடுப்பு – கவிஞரின் மாணவர்கள், காரைக்குடி – 1979.
  • ‘பொற்கிழி’ – பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு, சிவகங்கை.
  • ‘கவிப்பேரரசர்’ பட்டம், ‘பொற்கிழி’ ரூ.10000- மணிவிழா எடுப்பு – கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க மாநில இலக்கிய அணி,சென்னை – 1980
  • ‘தமிழ்ச் சான்றோர்’விருது, பதக்கம் -தமிழகப் புலவர் குழு,சேலம் -1983.
  • ‘கலைஞர் விருது’ – என்.டி.இராமாராவ் (ஆந்திர முன்னாள் முதல்வர்), கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க முப்பெரும் விழா, தேசிய முன்னணித் தொடக்கவிழா, சென்னை -1988.
  • ‘பாவேந்தர் விருது’(1987க்குரியது) பொற்பதக்கம் – கலைஞர் மு.கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை -1989.
  • ‘பொற்கிழி’ – விக்கிரமன்,(‘அமுதசுரபி’ ஆசிரியர்), அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் -1993.
  • ‘பூங்கொடி’ நூலுக்கு ‘இந்திராணி இலக்கியப் பரிசு’ ரூ.5,000 – இந்திராணி அறக்கட்டளை, கரூர் -1993.
  • ‘அரசர் முத்தையவேள் நினைவுப்பரிசில்’, வெள்ளிப் பேழை, பொற்குவை ரூ.50000 அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை-1993.
  • ‘இரண்டாம் புரட்சிக் கவிஞர்’ பட்டம் மற்றும் ‘இராணா இலக்கிய விருது’, பொற்குவை ரூ.10000- தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு -1994.
  • ‘கல்வி உலகக் கவியரசு’ விருது – அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி -1996.
  • ‘பொற்கிழி’ – பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி-
  • ‘கலைமாமணி விருது’ பொற்பதக்கம் – செல்வி பாத்திமா பீவி, ஆளுநர்,- கலைஞர் மு.கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை -1998 (கவிஞர் இவ்விருதை ஏற்க மறுத்தார்)
  • ’பொற்கிழி’- முதல்வர் கலைஞர் – கவிஞர் அப்துல் ரகுமான் மணிவிழா, சென்னை. (இவ்விழாவில் வீறுகவியரசர் கலந்து கொள்ள இயலவில்லை.

                                 பிற சிறப்புகள்     

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் வீறுகவியரசரின் நூல்கள் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு பல்கலைக் கழகங்களில் வீறுகவியரசரின் நூல்கள் குறித்துப் பலர் ஆய்வேடுகள் அளித்து, ‘முனைவர்’ (Ph.D.), ‘ஆய்வு நிறைஞர்’ (M.Phil.) பட்டங்கள் பெற்றுள்ளனர்
  • வீறுகவியரசரின் படைப்புகள் பற்றி ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
  • பல்வேறு இதழ்கள் வீறுகவியரசரின் பற்றி சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளன.
  • காரைக்குடி நகராட்சியால் காரைக்குடியில் ஒரு பெரிய நெடுஞ்சாலைக்கு ‘கவியரசர் முடியரசன் சாலை’ எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது (1999)
  • ‘வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்’ அமைப்பு, முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் காரைக்குடியில் 21.2.2000 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டு ஆண்டு தோறும் வீறுகவியரசர் முடியரசன் விழாவை ‘வீறுதமிழுக்கு விழா’வாக நடத்தி தமிழ்த்தொண்டு ஆற்றி வருகிறது.
  • தமிழ்நாட்டரசால் வீறுகவியரசரின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன (2000).
  • ‘சாகித்திய அகாதெமி’யால் வீறுகவியரசரின் பல கவிதைகள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உருசிய, செக் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்’ எனும் வரிசையில் ‘முடியரசன்’ எனும் நூலைச் சாகித்திய அகாதெமி, வெளியிட்டுள்ளது (2006).
  • வீறுகவியரசரின் மைந்தர் பாரிமுடியரசன் தொகுத்த ‘முடியரசன் கவிதை முத்துக்கள்’ எனும் நூலினைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது (2015).
  • பாரிமுடியரசன் எழுதிய ‘கவிதைக்குப் பிறந்த மகன் கவியரசர் முடியரசன்’ என்னும் நூலினை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மலாய்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட்டுள்ளன (2016).
  • பாரிமுடியரசன் எழுதிய ‘என்தந்தை முடியரசன்’ என்னும் நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது (2016).
  • பாரிமுடியரசனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வீறுகவியரசரின் கவிதை, காப்பிய நூல்கள் அனைத்தையும் ‘கவியரசர் முடியரசன் கவிதைகள்’ எனும் தலைப்பில் ஒரே முழுப்பெருந் தொகுப்பாக மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது (2016)
  • பாரிமுடியரசன் தொகுத்த தலைசிறந்த தலைவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், பல்துறை அறிஞர்கள் வீறுகவியரசர் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் கொண்ட ‘இவர்தாம் முடியரசர்! வீறுகவியரசர்’ எனும் நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது (2019)
  • காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்ட அரங்கிற்கு ‘வீறுகவியரசர் முடியரசனார் அரங்கம்’ எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது (2018)
  • கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியும், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களமும் இணைந்து ‘வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய நூலை அக்கல்லூரியும் அவைக்களமும் இணைந்து வெளியிட்டுள்ளன (2019)
  • பாரிமுடியரசன் தொகுத்த ‘வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் (தமிழம்)’ எனும் நூலை சீதை பதிப்பகம் வெளியிட்டுள்ளது (2019).
  • பாரிமுடியரசன் தொகுத்த ‘வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் (பொருண்மை வகைத் தொகுப்பு)’ நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட உள்ளது.
  • பாரிமுடியரசன் தொகுத்த, வீறுகவியரசர் பற்றி தலைசிறந்த கவிஞர்கள் வடித்த கவிதைகள் அடங்கிய ‘வீறுகவிக்கு நூறுகவி’ எனும் நூலை வீறுகவியரசர் முடியரசன்’ அவைக்களம் வெளியிட உள்ளது
  • பாரிமுடியரசன் தொகுத்த வீறுகவியரசர் படைப்புகள் பற்றிய கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய ‘கவியுலகின் முடியரசன்’, ‘கவியழகில் முடியரசன்’ எனும் நூல்களை வீறுகவியரசர் முடியரசன்’ அவைக்களம் வெளியிட உள்ளது
  • காரைக்குடியில் வீறுகவியரசர் முடியரசனார் மணிமண்டபம் மற்றும் சிலையும், சென்னையில் சிலையும் தமிழ்நாட்டரசால் நிறுவப்பட உள்ளன.
  • குடியரசு, விடுதலை, திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், எழில், முருகு, பொன்னி, போர்வாள், போர்முரசு, தமிழ்நேசன்(மலேசியா), குயில், மாலைமணி, திராவிட மணி, தமிழ், இனமுரசு, இனமுழக்கம், அலைஓசை, திராவிடன், திருநாடு, நம்நாடு, தனியரசு, புதுவாழ்வு, மன்றம், தாமரை, முல்லை, அழகு, தென்றல், கதிரவன், வாரச்செய்தி, பிரசண்ட விகடன், தமிழ்ப்பாவை, நித்திலக் குவியல், செந்தமிழ்ச்செல்வி, கலைக்கதிர், அமுதசுரபி, கழகக்குரல், மறவன்மடல், சமநீதி, உரிமைவேட்கை, காதல், பாசறை, தென்னரசு, தென்னகம், கவிதை, முல்லைச்சரம், காவியப்பாவை, இளந்தமிழன், தமிழரசு, குங்குமம், தமிழ்நாடு, தினமனி, தினமணி கதிர், உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள், வீறுகவியரசரின் எழுத்தோவியங்களைத் தாங்கி வெளிவந்துள்ளன.

                             பிற குறிப்புகள்

  • இளம் பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள்.
  • 20ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939).
  • தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940).
  • 21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடினார் (1940).
  • 21ஆம் அகவையில் இயற்றிய ‘சாதி என்பது நமக்கு ஏனோ?’ என்ற கவிதை பேரறிஞர் அண்ணாவால் ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடப்பட்டது (1942).
  • தன்மான இயக்கத் தொடர்பால் ‘வித்துவான்’ தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார் (1943).
  • நவாபு டி.எஸ்.இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி. அங்கிருந்த சிறை வாழ்க்கையும், மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார் (1944).
  • பெரியார் தலைமையில் அண்ணா முன்னிலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், மாநாட்டுத் தீர்மானத்தை முடியரசன் முன்மொழிந்தார். பேராசிரியர் க.அன்பழகன் வழி மொழிந்தார். மாநாட்டில் அறிஞர் அண்ணாவுடன் முதல் நேரடிச் சந்திப்பு (1945).
  • ‘குழிபிறை’ என்ற ஊரில் ஆசிரியப் பணி (1945).
  • புதுவைக்கு அருகில் மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து ‘வித்துவான்’ பட்டம் பெற்றார் (1947).
  • சென்னையில், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரும், டாக்டர். மா.இராசமாணிக்கனாரும் பணி புரிந்த முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி அப்பள்ளி மாணவர்களால் “வெல்க தமிழ் வாத்தியார்” என்றழைக்கப்பட்டார் (1947-49).
  • சென்னையில் பல்வேறு இதழ்களில் இலக்கியப் பணி- ‘பொன்னி’ இதழில் ‘பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக’ அறிமுகம். திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49).
  • தான் கொண்ட கொள்கைக்காகக் கைம்பெண்-சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள தாயாரிடம் வேண்டுதல், ஒரே மகன் என்பதால், இசைவு  தரத் தாயார் மறுத்தல். சாதி மறுப்புத் திருமணத்திற்கு மட்டும் பெற்றோர் இசைதல் (1948).
  • பெற்றோர் ஏற்பாட்டில் ‘கலைச்செல்வி’ எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் (1949).
  • திருமணமான ஆண்டே துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949)
  • காரைக்குடியில் மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தமிழாசான் பணியேற்றார் 1949)
  • சாதி மறுப்பு மணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்துவிடாமல் தாமும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்து ‘அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார்.
  • “என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே” எனப் பாவேந்தர் பாரதிதாசனால் போற்றப் பெற்றார் (1950).
  • தலை மகள் குமுதம் பிறப்பு (9.4.1950).
  • தலை மகன் பாரி பிறப்பு (4.8.1952).
  • குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர் பிழைத்தார் (1955).
  • மூன்றாவது மகவான ஆண் மகவு பிறத்தல். செய்நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்கு ‘சுப்பிரமணியன்’ எனப் பெயரிட்டார் (1955).
  • தமிழண்ணலுடன் இணைந்து ‘எழில்’ என்ற இலக்கிய இதழ் நடத்தினார் (1955).
  • மகள் அன்னம் பிறப்பு (3.1.1958).
  • மகன் ‘சுப்பிரமணியன்’ மறைவு. கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959).
  • மகன் குமணன் பிறப்பு (20.4.1960).
  • நடிகவேள் எம்.ஆர்,ராதா நடித்த ‘கண்ணாடி மாளிகை’ என்ற திரைப்படத்திற்கு பாடல்கள், உரையாடல் எழுதினார். திரைத்துறையின் சிறுமைகளைப் பொறாது வெறுப்புற்றுத் தன்மானத்துக்கும் தன் கொள்கைகட்கும், அத்துறை ஒத்து வராததால் அதிலிருந்து வெளியேறினார் (1960-62).
  • மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் பணி (1962).
  • மகன் செல்வம் பிறப்பு (3.3.1963).
  • இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு(1965).
  • ‘பூங்கொடி’ நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடைசெய்ய ஏற்பாடு (1966).
  • ஆட்சி மாற்றத்தால் ‘பூங்கொடி’ தடை ஏற்பாடு விலக்கம் (1967).
  • மகள் அல்லி பிறப்பு (8.5.1968).
  • மகள் குமுதம் திருமணம் (8.6.1975).
  • எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனவுடன் அரசு சார்பில் சென்னையில் நடத்திய அண்ணா விழாக் கவியரங்கிற்கு முடியரசனாரைத் தலைமை ஏற்கச் செய்தார் (15.09.1977).
  • நாடி வந்த அரசவைப் பதவிகளை ஏற்க மறுத்தார் (15.09.1977).
  • தமிழாசிரியப் பணி ஓய்வு (1978).
  • மகள் அன்னம் திருமணம் (6.9.1979).
  • மகன் பாரி திருமணம் (29.12.1983).
  • நோய் வாய்ப்படல் (1990).
  • மகன் குமணன் திருமணம் (24,2,1991).
  • மகன் செல்வம் திருமணம் (8.11.1992).
  • மகள் அல்லி திருமணம் (1.10.1995).

      இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல், கொள்கைக் குன்றமாக – தடம்புரளாத் தங்கமாக – தன்மானச் சிங்கமாக – தமிழ் வேழமாக வாழ்ந்தவர், பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமல், அரசவைப் பதவிகள் நாடி வந்தபோது அவற்றைப் புறக்கணித்தும், ‘வளையா முடியரசர்’ என்றும், ‘வணங்கா முடியரசர்’ என்றும் புகழ்பெற்றவர். தன்மானக் கொள்கையால் மைய, மாநில அரசின் அரிய பல விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் வீறும், வேட்கையும் பெறச் செய்தவர். கனவிலும் கவிதை பாடுபவர்.

               தம் வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை

          “வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்

             கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்

            நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நறுந்தமிழே

            ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே”

                              * * * * * * *

வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்

17. பூங்கொடி வீதி,

569, சூடாமணிபுரம்,

காரைக்குடி – 630 003.

தொடர்பு எண்:

+91 97888 04480

+91 98425 89571

+91 6379 670 194

+44 74286 31805 (இலண்டன்)