வீறுகவியரசர் முடியரசர் புகழேந்தும் பாட்டரங்கம் – பகுத்தறிவுப் பாவலர் மன்ற நிகழ்வு
வீறுகவியரசர் முடியரசர் புகழேந்தும் பாட்டரங்கம் – பகுத்தறிவுப் பாவலர் மன்ற நிகழ்வு Read More »
அனைத்தும் ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ! வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும் உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான் வள்ளல் அழகப்பர் பற்றி வீறுகவியரசர் முடியரசனார் எழுதிய கவிதை… கல்வி வள்ளலைப் போற்றி வணங்குகிறோம்..
காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய வள்ளல் அழகப்பரின் 114 ஆவது வெள்ளணிநாள் விழா Read More »
முடியரசனார் தூண்டுதலால் தந்தை பெரியார் ‘கடவுள் வாழ்த்து’ உரைத்த கதை – கம்பனடிசூடி பழ.பழனியப்பன் என்னை வழிநடத்திய அறிஞர் பெருமக்களுள் மு.வ அவர்களுக்கு அடுத்தவராய் நான் மதிப்பது வீறுகவியரசர் முடியரசனார் அவர்களைத்தான்.. நான் காரைக்குடி மீ.சு.வி பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தபோது முடியரசனாரிடம்தான் தமிழ் பயின்றேன்.அப்போது என்னைப் பெரியார் வழியில் வழிநடத்தியவர் அவர்.ஓய்வுநேரங்களில் ஆசிரியர் ஓய்வறையில் அவரோடும் ஆசிரியர் தமிழண்ணலோடும் விவாதிப்பதற்குரிய உரிமையைக் கொடுத்திருந்தார்.கம்பனடிப்பொடியாரிடம் நான் அடிமையாவதற்கு முன்பே எனக்கு கம்பராமாயணத்தில் ஈடுபாடு உண்டாக்கியவர் அவர்தான். ‘உலகம் யாவையும்
தந்தை பெரியாரின் ‘கடவுள் வாழ்த்து’ Read More »
(முன்னாள் அரசவைக்கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவரும், திரைப்படப் பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் அவர்களது நினைவுப் பகிர்வு) மாபெரும் கவியரசர் முடியரசன் மிகப்பெரும் படைப்பாற்றால் மிக்க பெரும் கவிஞர். கவிதை உலகின் முடியரசன். எனக்கு மட்டுமல்ல; பெருங்கவிஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கியவர். அவரின் கவிதைகளும் காப்பியங்களும் பெரிய விலை மதிப்பற்ற சங்க காலத்திலே எழுதப்பட்டவை போன்றவை. தமிழாட்சி மலரவும், தமிழர் தன்மானமும் தன்னெழுச்சியும் சமத்துவமும் பொதுமையும் பெற்று வாழவும், இதற்காகத் திராவிட இயக்கம் ஆட்சி பீடம் ஏறவும் கவிதைகள்
எம் ஜி ஆர் வழங்க முன்வந்த பதவியை ஏற்க மறுத்த வீறுகவியரசர் – புலவர் புலமைப்பித்தன் Read More »