படங்கள்: கோவையில் வீறுதமிழுக்கு விழா – வீறுகவியரசர் வெள்ளணி விழா (07.10.2022)

கோவையில் 7.10.22 அன்று கோவைப் பேரூர் ஆதீன கலைக்கல்லூரியும் வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களமும் இணைந்து ‘வீறுகவியரசர் வெள்ளணி விழா, வீறுகவியரசர் வலைத்தளத் தொடக்க விழா, வீறுகவியரசர் புலமைப் பரிசிலுக்கான உலகளாவிய அளவில் வீறுகவிதைகள் பற்றியக் காணொளிப் பேச்சுப் போட்டி அறிவிப்பு விழா’ ஆகிய விழாக்கள்’ வீறுதமிழுக்கு விழாவாக கோவை பேரூர் த.சா.அ. கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடத்தின.

இவ்விழாவில் பேரூர் ஆதினம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதசல அடிகளார் அவர்களும், சிரவை ஆதினம் சீர்வளர்சீர் இராமாநந்தா குமரகுருபரர் அடிகளார் அவர்களும் எழுந்தருளி “வீறுகவியரசர் வலைத்தளத்தைத் தொடங்கி வைத்து அருள் வாழ்த்துரை வழங்கினர்.

கோவை சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனரும் தமிழ் நாட்டரசின் தமிழ்ப் பரப்புரைக் கழக ஆலோசனைக் குழு உறுப்பினருமான புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

இலண்டனிலிருந்து காணொளி மூலம் வீறுகவியரசர் அவைக்கள இணையப் பொறுப்பாசிரியர் கவி மதுரன் தமிழவேள் அவர்கள் ‘வீறுகவியரசர் புலமைப் பரிசிலு’க்கான அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றினார்.

எழுத்தாளர் பாரி முடியரசன் வரவேற்புரை ஆற்றினார். கோவை தொல்காப்பியர் சங்கம் புலவர் காளியப்பன் நன்றி நவின்றார். பொறிஞர் கவுதமன் தொழில் நுட்ப ஏற்பாடுகளை இயக்கினார்.

இவ்விழாவில் வீறுகவியரசரின் கெழுதகை நண்பர் தமிழறிஞர் தமிழண்ணலின் மூத்த புதல்வர் சோலை பெரியகருப்பனும் அவரது துணைவியாரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

விழாப் படங்கள்:

செய்தி:-
பொறிஞர் கவுதமன்,
துணைச்செயலாளர்,
வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களம்.

Leave a Comment

Your email address will not be published.