செய்தி

படங்கள்: கோவையில் வீறுதமிழுக்கு விழா – வீறுகவியரசர் வெள்ளணி விழா (07.10.2022)

கோவையில் 7.10.22 அன்று கோவைப் பேரூர் ஆதீன கலைக்கல்லூரியும் வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களமும் இணைந்து ‘வீறுகவியரசர் வெள்ளணி விழா, வீறுகவியரசர் வலைத்தளத் தொடக்க விழா, வீறுகவியரசர் புலமைப் பரிசிலுக்கான உலகளாவிய அளவில் வீறுகவிதைகள் பற்றியக் காணொளிப் பேச்சுப் போட்டி அறிவிப்பு விழா’ ஆகிய விழாக்கள்’ வீறுதமிழுக்கு விழாவாக கோவை பேரூர் த.சா.அ. கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடத்தின. இவ்விழாவில் பேரூர் ஆதினம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதசல அடிகளார் அவர்களும், சிரவை ஆதினம் சீர்வளர்சீர் …

படங்கள்: கோவையில் வீறுதமிழுக்கு விழா – வீறுகவியரசர் வெள்ளணி விழா (07.10.2022) Read More »

வீறுகவியரசர் கவிதைகள் – மாணவர்க்கான போட்டிகள் 16.10.2022

வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) காரைக்குடி அழகப்பா மாதிரி மேனிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்தம் குரல்வழி வீறுகவியரசரது பா முழக்கம் ஓங்கி ஒலித்தது. இன்றைய போட்டிகள் தொடர்பாக வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் முன்னதாக வெளியிட்ட அறிக்கை வருமாறு: வீறுகவி முடியரசர் கவிபாடி முத்தமிழுக்கு முடி சூட்டுவோம்! வீரத்தமிழ் மூவேந்தர் செந்தமிழ் ஆட்சி நிலை நாட்டுவோம்!! வீண்சாதி மதமற்ற சமத்துவத் …

வீறுகவியரசர் கவிதைகள் – மாணவர்க்கான போட்டிகள் 16.10.2022 Read More »

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி: தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார். தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்; அந்நிலை …

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு) Read More »

வீறுதமிழுக்கு விழா: கோவையில் கொண்டாட்டம்

தமிழியப் புரட்சிக் கவிஞர் வீறுகவியரசர் முடியரசனாரின் 103ம் வெள்ளணி நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி அரங்கத்தில் ‘வீறுதமிழுக்கு விழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்னிலைத் தமிழ்ச்சான்றோர் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றனர். வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலைத்தளத் தொடக்கம், வீறுகவியரசர் முடியரசனார் நினைவுப் புலமைப் பரிசில் முதலானவை இன்றைய நிகழ்வின் சிறப்புகளாகும். வீறுகவியரசர் வெள்ளணி நாளை முன்னிட்டு 92 ஆண்டு கால வரலாறு கொண்ட இலங்கை நாளிதழ் வெளியிட்ட சிறப்புக் …

வீறுதமிழுக்கு விழா: கோவையில் கொண்டாட்டம் Read More »