..
அனைத்தும் ஈந்தான்
அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான்
அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான்
உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான்
உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ!
வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு
வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான்
உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும்
உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான்
- வள்ளல் அழகப்பர் பற்றி வீறுகவியரசர் முடியரசனார் எழுதிய கவிதை… கல்வி வள்ளலைப் போற்றி வணங்குகிறோம்..