காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய வள்ளல் அழகப்பரின் 114 ஆவது வெள்ளணிநாள் விழா

.. அனைத்தும் ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ! வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும் உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான் வள்ளல் அழகப்பர் பற்றி வீறுகவியரசர் முடியரசனார் எழுதிய கவிதை… கல்வி வள்ளலைப் போற்றி வணங்குகிறோம்..

வீறுகவியரசா் முடியரசனாா் விழா – நாளிதழ்களில் வெளியான செய்திகள்

‘தினமணி’யின் வெளியான செய்தி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் வீறுகவியரசா் முடியரசனாா் விழா திங்கள்கிழமை (05.12.2022) இரவு நடைபெற்றது. வீறுகவியரசா் முடியரசன் அவைக்களம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் தி. நெல்லையப்பன் எழுதிய ‘வீறுகவி முடியரசனாரின் படைப்பியல் திறன்’ என்ற நூலை அமைச்சா் வெளியிட்டாா். இதன் முதல் பிரதியை அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி பெற்றுக் கொண்டாா். மாவட்ட …

வீறுகவியரசா் முடியரசனாா் விழா – நாளிதழ்களில் வெளியான செய்திகள் Read More »

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் யாப்பு ஆளுமை

முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை, (பேராசிரியர் / இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3 முன் குறிப்பு :-     இந்திய ஒன்றிய அரசின் தன்னாட்சி நிறுவனமாகிய சாகித்திய அகாதெமி, சென்னை பல்கலைக்கழகம், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் ஆகின இணைந்து 18.2.2022 வெள்ளிக்கிழமை சென்னை மெரீனா வளாகம் சென்னை பல்கலைக்கழகப் பவளவிழாக் கலையரங்கில் நடத்திய வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு உரையரங்கத்தில் அறிஞர் பெருமக்களால் படிக்கப்பட்ட கட்டுரைகள்: பொதுத் தலைப்பு …

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் யாப்பு ஆளுமை Read More »

நூற்றாண்டு நாயகர் கவியரசர் முடியரசன்

சென்னிமலை தண்டபாணி     வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அக்டோபர் 2019 “இனிய உதயம்” இலக்கிய இதழ் வெளியிட்ட கட்டுரை ‘சுற்றிவ ளைத்திடும் எத்துய ரத்தையும்சுட்டுமு டித்ததை – எறிவேனேசொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும்சொற்றமி ழுக்கெனைத் – தருவேனே”என்ற சூளுரையோடு, தன்மானம் குன்றாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்த வீறுகவியரசர் முடியரசனாரின் நூற்றாண்டு விழா 7.10.2019 அன்று காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது. 7.10.1920ல் பெரியகுளத்தில் பிறந்த இந்தப் பாட்டுப்பறவை 78 ஆண்டுகள் ஒரு திங்கள் இருபத்து எட்டு நாள்கள் வாழ்ந்து, …

நூற்றாண்டு நாயகர் கவியரசர் முடியரசன் Read More »

தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் கலப்பது தீமையா? வீறுகவியரசர் காட்டும் வழி

ஞா.அருள் ஞான வித்யா ‘வீறுகவியரசர் முடியரசனார் படைப்புலகம்’ நூலில் ‘வீறுகவியரசரின் இளம்பெருவழுதி காப்பியத்தில் மொழிக்காப்பு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரை. முன்னுரை மதுரைப் பல்கலைக்கழகம் பாடமாக வைப்பதற்கு நாடகக்காப்பியம் ஒன்று இயற்றித் தருமாறு வீறுகவியரசரை வேண்டியதால் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்னும் புறநானூற்றுப் பாடலைப் பாடிய புலவரும் புரவலருமாகிய கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பெயரில் முடியரசனார் நாடகக் காப்பியம் இயற்றினார். அந்நாடகக் காப்பியத்தில் காணலாகும் மொழிக்காப்புணர்வை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இளம்பெருவழுதி உலகப் புகழுக்குரிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ …

தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் கலப்பது தீமையா? வீறுகவியரசர் காட்டும் வழி Read More »

தந்தை பெரியாரின் ‘கடவுள் வாழ்த்து’

முடியரசனார் தூண்டுதலால் தந்தை பெரியார் ‘கடவுள் வாழ்த்து’ உரைத்த கதை – கம்பனடிசூடி பழ.பழனியப்பன் என்னை வழிநடத்திய அறிஞர் பெருமக்களுள் மு.வ அவர்களுக்கு அடுத்தவராய் நான் மதிப்பது வீறுகவியரசர் முடியரசனார் அவர்களைத்தான்.. நான் காரைக்குடி மீ.சு.வி பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தபோது முடியரசனாரிடம்தான் தமிழ் பயின்றேன்.அப்போது என்னைப் பெரியார் வழியில் வழிநடத்தியவர் அவர்.ஓய்வுநேரங்களில் ஆசிரியர் ஓய்வறையில் அவரோடும் ஆசிரியர் தமிழண்ணலோடும் விவாதிப்பதற்குரிய உரிமையைக் கொடுத்திருந்தார். கம்பனடிப்பொடியாரிடம் நான் அடிமையாவதற்கு முன்பே எனக்கு கம்பராமாயணத்தில் ஈடுபாடு உண்டாக்கியவர் அவர்தான். ‘உலகம் …

தந்தை பெரியாரின் ‘கடவுள் வாழ்த்து’ Read More »

படங்கள்: கோவையில் வீறுதமிழுக்கு விழா – வீறுகவியரசர் வெள்ளணி விழா (07.10.2022)

கோவையில் 7.10.22 அன்று கோவைப் பேரூர் ஆதீன கலைக்கல்லூரியும் வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களமும் இணைந்து ‘வீறுகவியரசர் வெள்ளணி விழா, வீறுகவியரசர் வலைத்தளத் தொடக்க விழா, வீறுகவியரசர் புலமைப் பரிசிலுக்கான உலகளாவிய அளவில் வீறுகவிதைகள் பற்றியக் காணொளிப் பேச்சுப் போட்டி அறிவிப்பு விழா’ ஆகிய விழாக்கள்’ வீறுதமிழுக்கு விழாவாக கோவை பேரூர் த.சா.அ. கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடத்தின. இவ்விழாவில் பேரூர் ஆதினம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதசல அடிகளார் அவர்களும், சிரவை ஆதினம் சீர்வளர்சீர் …

படங்கள்: கோவையில் வீறுதமிழுக்கு விழா – வீறுகவியரசர் வெள்ளணி விழா (07.10.2022) Read More »

வீறுகவியரசர் கவிதைகள் – மாணவர்க்கான போட்டிகள் 16.10.2022

வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) காரைக்குடி அழகப்பா மாதிரி மேனிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்தம் குரல்வழி வீறுகவியரசரது பா முழக்கம் ஓங்கி ஒலித்தது. இன்றைய போட்டிகள் தொடர்பாக வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் முன்னதாக வெளியிட்ட அறிக்கை வருமாறு: வீறுகவி முடியரசர் கவிபாடி முத்தமிழுக்கு முடி சூட்டுவோம்! வீரத்தமிழ் மூவேந்தர் செந்தமிழ் ஆட்சி நிலை நாட்டுவோம்!! வீண்சாதி மதமற்ற சமத்துவத் …

வீறுகவியரசர் கவிதைகள் – மாணவர்க்கான போட்டிகள் 16.10.2022 Read More »

எம் ஜி ஆர் வழங்க முன்வந்த பதவியை ஏற்க மறுத்த வீறுகவியரசர் – புலவர் புலமைப்பித்தன்

(முன்னாள் அரசவைக்கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவரும், திரைப்படப் பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் அவர்களது நினைவுப் பகிர்வு) மாபெரும் கவியரசர் முடியரசன் மிகப்பெரும் படைப்பாற்றால் மிக்க பெரும் கவிஞர். கவிதை உலகின் முடியரசன். எனக்கு மட்டுமல்ல; பெருங்கவிஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கியவர். அவரின் கவிதைகளும் காப்பியங்களும் பெரிய விலை மதிப்பற்ற சங்க காலத்திலே எழுதப்பட்டவை போன்றவை.       தமிழாட்சி மலரவும், தமிழர் தன்மானமும் தன்னெழுச்சியும் சமத்துவமும் பொதுமையும் பெற்று வாழவும், இதற்காகத் திராவிட இயக்கம் ஆட்சி பீடம் ஏறவும் …

எம் ஜி ஆர் வழங்க முன்வந்த பதவியை ஏற்க மறுத்த வீறுகவியரசர் – புலவர் புலமைப்பித்தன் Read More »