வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்

எம் ஜி ஆர் வழங்க முன்வந்த பதவியை ஏற்க மறுத்த வீறுகவியரசர் – புலவர் புலமைப்பித்தன்

(முன்னாள் அரசவைக்கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவரும், திரைப்படப் பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் அவர்களது நினைவுப் பகிர்வு) மாபெரும் கவியரசர் முடியரசன் மிகப்பெரும் படைப்பாற்றால் மிக்க பெரும் கவிஞர். கவிதை உலகின் முடியரசன். எனக்கு மட்டுமல்ல; பெருங்கவிஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கியவர். அவரின் கவிதைகளும் காப்பியங்களும் பெரிய விலை மதிப்பற்ற சங்க காலத்திலே எழுதப்பட்டவை போன்றவை.       தமிழாட்சி மலரவும், தமிழர் தன்மானமும் தன்னெழுச்சியும் சமத்துவமும் பொதுமையும் பெற்று வாழவும், இதற்காகத் திராவிட இயக்கம் ஆட்சி பீடம் ஏறவும் கவிதைகள் […]

எம் ஜி ஆர் வழங்க முன்வந்த பதவியை ஏற்க மறுத்த வீறுகவியரசர் – புலவர் புலமைப்பித்தன் Read More »

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி: தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார். தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்; அந்நிலை மாற வேண்டிக்

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு) Read More »

வீறுதமிழுக்கு விழா: கோவையில் கொண்டாட்டம்

தமிழியப் புரட்சிக் கவிஞர் வீறுகவியரசர் முடியரசனாரின் 103ம் வெள்ளணி நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி அரங்கத்தில் ‘வீறுதமிழுக்கு விழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்னிலைத் தமிழ்ச்சான்றோர் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றனர். வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலைத்தளத் தொடக்கம், வீறுகவியரசர் முடியரசனார் நினைவுப் புலமைப் பரிசில் முதலானவை இன்றைய நிகழ்வின் சிறப்புகளாகும். வீறுகவியரசர் வெள்ளணி நாளை முன்னிட்டு 92 ஆண்டு கால வரலாறு கொண்ட இலங்கை நாளிதழ் வெளியிட்ட சிறப்புக்

வீறுதமிழுக்கு விழா: கோவையில் கொண்டாட்டம் Read More »